செய்திகள்
புதுக்கோட்டையில் முதல்வர் விழாவில் கைது: போலீஸ் அதிகாரிகள் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு
புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கைதான தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் இன்று, தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் கடந்த 9-ந்தேதி புதிததாக கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா நடந்தது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார்.
முன்னதாக இந்த விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, திருமயம் ரகுபதி, ஆலங்குடி மெய்யநாதன் ஆகியோரை போலீசார் தடுத்து கைது செய்தனர்.
முதல்வர் வரும் வழியில் சாலை மறியல் செய்ததாக அவர்கள் மீது புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் கைதான 3 எம்.எல்.ஏ.க்களும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 11-ந்தேதி புதுக்கோட்டையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது பேசிய மு.க ஸ்டாலின் சட்ட விரோதமாக எம்.எல்.ஏ.க்களை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என்று அறிவித்தார். அதேபோல் எதற்காக எம்.எல்.ஏ.க்களை கைது செய்தார்கள் என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் பேசினார்.
இந்தநிலையில் புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கைதான தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் இன்று, தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
அதில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், ஏ.டி.எஸ்.பி. கண்ணன், டி.எஸ்.பி. பாலகுரு, இன்ஸ்பெக்டர் பால சுப்பிரமணியன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 167, 341, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு குறித்த மனு மீதான விசாரணையை நீதிபதி நாகராஜன் வருகிற 20-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.