செய்திகள்

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது, அ.தி.மு.க.வின் அராஜக போக்கு: இளங்கோவன் குற்றச்சாட்டு

Published On 2017-06-11 22:27 IST   |   Update On 2017-06-11 22:27:00 IST
மூன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கைது செய்தது மிகவும் கண்டிக்கதக்கது. இதில் அ.தி.மு.க. ஆட்சி அராஜக போக்காக செயல்படுகிறது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புதுக் கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக காங்கிரஸ் கட்சி புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டற்கும், முன்னர் நன்றாக செயல்பட்ட தலைவர்களை மாற்றப்பட்டதற்கும் மேலிடத்தில் புகார் செயப்படும். தற்போது அதிமுக 3 அணியாக உள்ளது. இது 6 அணியாக மாற வாய்ப்பு உள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு தவிர, மோதல்கள் கிடையாது. கடந்த ஜெயலலிதாவின் 5 ஆண்டு ஆட்சியில் இருந்த நிர்வாகம் தற்போது மிக மோசமாக உள்ளது. மூன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவிற்கு கலந்து கொள்ள விடாமல் கைது செய்தது மிகவும் கண்டிக்கதக்கது. இதில் அ.தி.மு.க. ஆட்சி அராஜக போக்காக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News