செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

Published On 2017-05-23 07:15 GMT   |   Update On 2017-05-23 07:16 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,280-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் கடந்த 19-ந் தேதி தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்து 88 ஆக இருந்தது. தொடர்ந்து 2 நாட்கள் இதே விலைதான் நீடித்தது. நேற்று பவுனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 120 ஆக இருந்தது.

இன்று பவுனுக்கு ரூ.160 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 280 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,385-க்கு விற்கிறது.

தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு, சர்வதேச சந்தை நிலவரம் போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக தெரிகிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.60 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.42.80-க்கு விற்கிறது.
Tags:    

Similar News