செய்திகள்

வேதாரண்யத்தில் மான் கொம்பு வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published On 2017-05-18 17:31 IST   |   Update On 2017-05-18 17:31:00 IST
வேதாரண்யத்தில் மான் கொம்பு வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் சேது சாலையை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது வீட்டில் மான் கொம்பு பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

வனத்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 18 மான் கொம்புகள், நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மேலும் 2 பேரை வனத்துறையினர் தேடி வந்தனர். அவர்களில் வேம்ப தேவன்காடு பகுதியை சேர்ந்த சுனில் குமார் (37) என்பவரை வன அலுவலர் அயூப்கான், வனவர்கள் இளங்கோவன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

Similar News