செய்திகள்

நீலாங்கரை அருகே ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன் காரில் வந்த 2 பேர் கைது

Published On 2017-05-04 04:06 IST   |   Update On 2017-05-04 04:35:00 IST
நீலாங்கரை அருகே ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன் காரில் வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள தேனீர் விடுதிக்கு காரில் வந்த 2 பேர் டீ குடித்துவிட்டு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து சென்றதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அடையாறு துணை கமிஷனர் சுந்தரவடிவேல், நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ்காந்தி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியில் நிற்காமல் வேகமாக சென்ற காரை போலீசார் விரட்டிச்சென்று பாலவாக்கம் பகுதியில் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சென்னை அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜாயேல்உசேன் (வயது 45), ஆவடியை சேர்ந்த ஜானி (36) என தெரியவந்தது.

காரில் சோதனை செய்தபோது, ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் 18 தாள்களும், ரூ.60 ஆயிரம் பணமும் போலி போலீஸ் அடையாள அட்டைகளும் போலீஸ் சீருடை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் கார் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். 

Similar News