செய்திகள்
செங்கல்பட்டில் காரில் கடத்தப்பட்ட புதுப்பெண்ணை மீட்க போலீஸ் நடவடிக்கை
செங்கல்பட்டில் தனது காதல் மனைவியை அவரது அண்ணன் கடத்தி சென்று விட்டதாக வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த ஈச்சங்கரணை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் பசுபதி (வயது 22). டிரைவர்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த கன்னியப்பன் மகள் ரம்யா (21)வும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி ரம்யா வீட்டை விட்டு வெளியேறினார். செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் மலைக்கோவிலில் ரம்யாவும், பசுபதியும் சந்தித்துக் கொண்டனர்.
பின்னர் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அங்கு கடந்த 29-ந் தேதி இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பசுபதியும், ரம்யாவும் காரில் செங்கல்பட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
செங்கல்பட்டை அடுத்த பச்சையம்மன் கோவில் அருகே வந்தபோது ரம்யாவின் அண்ணன் வினோத் 10 பேருடன் அங்கு வந்தார். அவர்கள் ரம்யாவை காரில் கடத்தி சென்றனர்.
இது குறித்து பசுபதி செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தார். அதில், ‘தனது காதல் மனைவியை அவரது அண்ணன் 10 பேருடன் வந்து கடத்தி சென்று விட்டார்’ என்று கூறியிருந்தார் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுப்பெண் ரம்யாவை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். ரம்யாவை அவரது அண்ணன், வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை. வேறு இடத்தில் கடத்தி சிறை வைத்திருக்கலாம் என்று தெரிகிறது. அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த 25-ந்தேதி தனது மகள் மாயமாகி விட்டதாக ரம்யாவின் தாயார் பத்மாவதி செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் கொடுத்திருந்தார். அது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.