செய்திகள்

டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்ட இதயம்

Published On 2017-03-30 04:06 GMT   |   Update On 2017-03-30 04:06 GMT
டெல்லியில் மூளைச்சாவு அடைந்த விமானப்படை வீரரின் இதயம் சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டு முதியவருக்கு பொருத்தப்பட்டது.
ஆலந்தூர்:

டெல்லியில் விமானப்படை வீரர் கஞ்சன்லால் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முதியவர் ஒருவருக்கு இதயம் தேவைப்படுவதாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானப்படை வீரரின் இதயத்தை சென்னை பெரும்பாக்கம் மருத்துவமனையில் உள்ள முதியவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

பொதுவாக 4 மணி நேரத்திற்குள் இதயத்தை பொருத்த வேண்டும். எனவே டெல்லியில் இருந்து நேற்று மாலை 4.10 மணிக்கு விமானப்படை வீரரின் இதயம் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டது.

சென்னைக்கு 6.50 மணிக்கு அந்த விமானம் வந்தது. உடனே விமான நிலையத்தில் இருந்து பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இரவு 7.25 மணிக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் முதியவருக்கு அந்த இதயம் பொருத்தப்பட்டது.

அதிக தூரம் விமானத்தில் இதயம் கொண்டு வரப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News