செய்திகள்

காஞ்சீபுரம்-திருவள்ளூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-01-13 12:26 IST   |   Update On 2017-01-13 12:26:00 IST
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்,காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சீபுரம்:

தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சன்பிராண்டு ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றினார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய- மாநில அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

இதில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், நிர்வாகிகள் பொன்மொழி, சிவிஎம். சேகர், பி.எம்.குமார், வி.ராஜேந்திரன், சிறுவேடல் செல்வம், வி.எஸ்.ராமகிருஷ்ணன், அபுசாலி, குமணன், பாண்டியன், சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், நிர்வாகிகள் படப்பை மனோககரன், மேடவாக்கம் ரவி, காமராஜ், ஆதிமாறன், செல்வக்குமார், ஜோசப், ஜெயக்குமார், பெருங்களத்தூர் சேகர், லோகநாதன், புகழேந்தி, எம்.கே.தண்டபாணி, துரைசாமி, விசுவநாதன், ரஞ்சன், பம்மல் வே.கருணாநிதி, தாம்பரம் காமராஜ் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்சி கொடியை ஏற்றி மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் நாசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர்கள் பரந்தாமன், காயத்ரி ஸ்ரீதரன், முன்னாள் எம்.எல்.ஏ. சிவாஜி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காளை மாடுடன் வந்து இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை அவர்கள் வைத்து இருந்தனர்.

Similar News