செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை மிரட்டல்: கோவில் பூசாரி கைது

Published On 2016-09-25 04:27 GMT   |   Update On 2016-09-25 04:27 GMT
அரியலூர் அருகே இளம்பெண்ணை கோவில் பூசாரியே பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர்-சித்ரா தம்பதியரின் மகள் விசித்ரா (வயது 16). மனநலம் பாதிக்கப்பட்டவர். சித்ரா வேலைக்கு செல்லும் போது அருகில் உள்ள உறவினர் வீட்டில் விசித்ராவை விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 11-ந்தேதி விசித்ரா வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வரும் தேவாங்க முதலியார் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராம்குமார் (27) வந்தார். விசித்ராவிடம் நைசாக பேசிய அவர், வீட்டிற்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்தார்.

கடந்த 23-ந்தேதி காளியம்மன் கோவிலில் அமர்ந்திருந்த விசித்ராவிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும் விசித்ராவை மிரட்டியுள்ளார்.

இருப்பினும் ராம்குமாரால் பாதிக்கப்பட்ட விசித்ரா, நடந்த சம்பவம் குறித்து தனது தாய் சித்ராவிடம் தெரிவித்தார். அவர் இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கோவில் பூசாரியே பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News