செய்திகள்
பாகிஸ்தான் தேசியகொடியை எரித்தபோது எடுத்த படம்

திருத்துறைப்பூண்டியில் பாகிஸ்தான் கொடியை எரித்த 11 பேர் கைது

Published On 2016-09-21 09:28 IST   |   Update On 2016-09-21 09:28:00 IST
திருத்துறைப்பூண்டியில் பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்த இந்து முன்னணியை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:

காஷ்மீரில் 18 ராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஓசூரில் விஷ்வ இந்து பரி‌ஷத் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் சூரி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்து முன்னணியை சேர்ந்த சங்கர் என்பவர் தாக்கப்பட்டதை கண்டித்தும், திருத்துறைப்பூண்டி அண்ணாசிலை அருகில் நகர இந்துமுன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் தேசியக்கொடி எரிக்கப்பட்டது.

இதுதொடர்பாக இந்து முன்னணி நகர தலைவர் சிவாஜி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News