செய்திகள்

திட்டக்குடியில் கல்லூரி ஊழியர்-விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் நகை, பணம் கொள்ளை

Published On 2016-06-04 15:49 IST   |   Update On 2016-06-04 15:49:00 IST
திட்டக்குடியில் கல்லூரி ஊழியர்-விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கடலூர்:

போதிரமங்களத்தில் உள்ள அம்மாபொன்நகரை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 24). இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நேற்று இரவு மதிவாணன் குடும்பத்தோடு தூங்கினார்.

நள்ளிரவில் இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரொக்கபணம் ரூ.75 ஆயிரத்தை கொள்ளை யடித்து சென்றுவிட்டனர்.

இந்த துணிகரகொள்ளை குறித்து ஆவினன்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள போதிரமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55), விவசாயி.

இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம மனிதர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரொக்கப்பணம் ரூ.75 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இன்று காலை தங்கராஜ் எழுந்தபோது பீரோவில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன. அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த நகை-பணம் கொள்ளைபோனது தெரியவந்தது.

அடுத்தடுத்து 2 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது.

Similar News