செய்திகள்

பெரம்பூரில் வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

Published On 2016-05-07 05:42 IST   |   Update On 2016-05-07 06:08:00 IST
பெரம்பூரில் வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்:

சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி(வயது 31). இவர், பெரவள்ளூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக பெரவள்ளூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் மூர்த்தி, பெரம்பூர் பெரியார் நகரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரவள்ளுர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூர்த்தியை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 6 பவுன் தங்க நகையை கைப்பற்றினர். பின்னர் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News