தமிழ்நாடு செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் புதுமண ஜோடி

திருத்தணியில் 100 ஜோடிகளுக்கு திருமணம்- போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது

Published On 2022-09-05 12:24 IST   |   Update On 2022-09-05 12:24:00 IST
  • திருத்தணி முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழுகிறது.
  • புதுமண ஜோடியும், அவர்களது உறவினர்களும் கோவிலில் தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

திருவள்ளூர்:

திருத்தணி முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழுகிறது.

முருகப்பெருமான் மணக்கோலத்தில் காட்சி அளிப்பதால் வெளியூர்களில் இருந்து வரும் புதுமண ஜோடிகள் திருத்தணி பகுதியில் அதிக அளவில் திருமணம் செய்து முருகப்பெருமானை தரிசித்து செல்கிறார்கள். இதனால் முகூர்த்த தினங்கள் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருத்தணி கோவிலில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இதேபோல் கோவிலை சுற்றி உள்ள சுமார் 70 மண்டபங்களில் திருமணம் நடைபெற்றது. இதனால் நேற்று இரவு முதலே திருமண கோஷ்டியினர் திருத்தணியில் பஸ், கார்களில் வந்து குவிந்தனர்.

இதன் காரணமாக திருத்தணி நகரில் அனைத்து இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதுமண ஜோடியும், அவர்களது உறவினர்களும் கோவிலில் தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News