விளையாட்டு
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
- நடப்பு தொடரில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
- மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் 64.76 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
புதுடெல்லி:
மாற்றுத் திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப்.46 பிரிவு) இந்திய வீரர் ரிங்கு ஹூடா 66.37 மீட்டர் தூரம் எறிந்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
நடப்பு தொடரில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். உலக சாதனையாளரான மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் 64.76 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். கியூபா வீரர் குல்லெர்மோ வரோனா கொன்சாலெஸ் (63.34 மீட்டர்) வெண்கலப்பதக்கம் பெற்றார். இன்னொரு இந்திய வீரர் அஜீத் சிங் (61.77 மீட்டர்) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.