விளையாட்டு

உலக பாரா தடகள போட்டிகள் நிறைவு: 22 பதக்கம் வென்று இந்தியா சாதனை

Published On 2025-10-06 03:52 IST   |   Update On 2025-10-06 03:52:00 IST
  • உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்தியா நடத்தியது.
  • இந்தப் போட்டியை நடத்திய 4-வது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

புதுடெல்லி:

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புதுடெல்லியின் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றன. 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.

மொத்தம் 186 பதக்கங்களுக்காக போட்டிகள் நடந்தன. இதில், சர்வதேச பாரா தடகள வீரர்கள், உலக சாம்பியன்கள் மற்றும் இந்திய விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், போட்டியை நடத்திய இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் நாடுகளை தொடர்ந்து உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்திய 4-வது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

பதக்கப் பட்டியலில் பிரேசில் முதலிடமும், சீனா 2வது இடமும் பிடித்தன. இந்தியா 10வது இடத்தில் உள்ளது.

Tags:    

Similar News