விளையாட்டு

இந்தியாவுக்கு 4வது தங்கம்... உலக குத்துச்சண்டையில் லவ்லினா சாதனை

Published On 2023-03-26 16:38 GMT   |   Update On 2023-03-26 16:38 GMT
  • குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டு இந்திய வீராங்கனைகளில் லவ்லினாவும் ஒருவர்.
  • தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததில் மகிழ்ச்சி அடைவதாக லவ்லினா தெரிவித்தார்.

புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார். 75 கிலோ எடைப்பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின் பார்க்கரை 5-2 என லவ்லினா வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார் லவ்லினா. குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டு இந்திய வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.

தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததில் மகிழ்ச்சி அடைவதாக லவ்லினா தெரிவித்தார். மேலும், உலக போட்டிகளில் இரண்டு வெண்கலமும், ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலமும் பெற்றிருந்த நிலையில், தங்கம் வெல்ல மிகவும் கடினமாக உழைத்ததாக தெரிவித்தார். 

Tags:    

Similar News