விளையாட்டு

தங்கம் வென்ற லவ்லினா, நிகாத் ஜரீன்

பெண்கள் தேசிய குத்துச்சண்டை - லவ்லினா, நிகாத் ஜரீன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்

Published On 2022-12-26 16:15 GMT   |   Update On 2022-12-26 16:15 GMT
  • லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் அருந்ததியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
  • 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தினார்.

போபால்:

6-வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. இதில் அசாமை சேர்ந்த லவ்லினா, 75 கிலோ இறுதிப்போட்டியில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரியை எதிர்த்துப் போட்டியிட்டார்.

தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் அருந்ததியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

அதேபோல, 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனாமிகாவை எதிர்கொண்டார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்த நிகாத், அனாமிகாவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.

Tags:    

Similar News