விளையாட்டு
ஐசிசி-யின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார்?- பரிந்துரை பட்டியல் வெளியீடு
- அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் இடம்பெற்றுள்ளார்.
- அக்டோபர் மாத சிறந்த வீராங்கனைக்கான தேர்வு பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாதந்தோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவிக்கிறது.
அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் தென் ஆப்ரிக்கா வீரர் செனுரன் முத்துசாமி, பாகிஸ்தான் வீரர் நோமன் அலி மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல், அக்டோபர் மாத சிறந்த வீராங்கனைக்கான தேர்வு பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் மற்றும் ஆஸ்தரேலிய வீராங்கனை ஆஷ் கார்ட்னர் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்து அறிவிக்கப்படும்.