விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசுத்தொகை ரூ.789 கோடியாக உயர்வு

Published On 2025-08-07 11:10 IST   |   Update On 2025-08-07 11:10:00 IST
  • சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.43 கோடி பரிசு தொகை அளிக்கப்படும்.
  • 2-வது இடத்துக்கு தலா ரூ.21.5 கோடி பரிசு தொகை கிடைக்கும்.

டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாம் போட்டிகளாகும். ஆண்டு தோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) கைப்பற்றினார். அல்காரசுக்கு (ஸ்பெயின்) பிரெஞ்சு ஓபன் பட்டம் கிடைத்தது. பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை மேடிசன் கெய்சும் (அமெரிக்கா), பிரெஞ்சு ஓபனை கோதா கவூப்பும் (அமெரிக்கா) விம்பிள்டன் பட்டத்தை இகாஸ்வியா டெக்கும் (போலந்து) கைப்பற்றினார்கள்.

ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 24-ந்தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. செப்டம்பர் 7-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.789 கோடியாக பரிசு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும்.

சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.43 கோடி பரிசு தொகை அளிக்கப்படும். 2-வது இடத்துக்கு தலா ரூ.21.5 கோடி பரிசு தொகை கிடைக்கும்.

Tags:    

Similar News