விளையாட்டு

அஜர்பைஜான் சர்வதேச பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் தேவிகா சிஹாக்

Published On 2026-02-09 00:57 IST   |   Update On 2026-02-09 00:58:00 IST
  • அஜர்பைஜான் சர்வதேச பேட்மிண்டன் தொடர் அந்நாட்டு தலைநகர் பாகுவில் நடைபெற்றது.
  • இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றார்.

பாகு:

அஜர்பைஜான் சர்வதேச பேட்மிண்டன் தொடர் அந்நாட்டு தலைநகர் பாகுவில் நடைபெற்றது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் தேவிகா சிஹாக், சக நாட்டு வீராங்கனை நவ்யா கந்தேரி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தேவிகா சிஹாக் 21-10, 21-13 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

தேவிகா சிஹாக் கடந்த வாரம் தாய்லாந்து ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News