விளையாட்டு

கமல்ப்ரீத் கவுர்

இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 3 ஆண்டுகள் தடை

Published On 2022-10-13 04:45 IST   |   Update On 2022-10-13 04:45:00 IST
  • ஒலிம்பிக் போட்டியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியிருந்தார்.
  • ஊக்க மருந்து பயன்படுத்தியதை அவர் ஒப்புக் கொண்டார்.

இந்திய வட்டு எறிதல் வீராங்கனையான கமல்பிரீத் கவுர், டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் 2வது இடம் பிடித்தார். இறுதி போட்டியில் அவருக்கு 6வது இடம் கிடைத்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 7ந் தேதி அவரிடம் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட ஸ்டானோசோலோல் என்ற ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது உறுதியானது. கடந்த ஏப்ரல்11ந் தேதி ஊக்க மருந்து பயன்படுத்தியதை கமல்பிரீத் கவுர் ஒப்புக் கொண்டார்.

முன்னதாக கமல் பிரீத் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அவருக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து, தடகள ஒருமைப்பாடு பிரிவு அறிவித்துள்ளது. இந்த தடை காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் 2024 ஆண்டு நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கமல்பிரீத் கவுர் பங்கேற்க முடியாது.

Tags:    

Similar News