விளையாட்டு

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய வீரர் தோல்வி

Published On 2026-01-31 02:05 IST   |   Update On 2026-01-31 02:05:00 IST
  • தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
  • காலிறுதியில் இந்திய வீரர் தருண் மன்னேபல்லி தோல்வி அடைந்தார்.

பாங்காக்:

தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீரர் தருண் மன்னேபல்லி, சீனாவின் சூ ஜுவான் சென் உடன் மோதினார்.

இதில் சீனா வீராங்கனை 21-11, 21-17 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்தியாவின் தருண் மன்னேபல்லி தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News