டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வரேவ்

Published On 2025-08-04 00:39 IST   |   Update On 2025-08-04 00:39:00 IST
  • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
  • ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.

டொரன்டோ:

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையரில் நடந்த 4வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-4 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டில் 1-0 என ஸ்வரேவ் முன்னிலை பெற்றபோது, அர்ஜெண்டினா வீரர் போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஸ்வரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News