டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன்: வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் தோல்வி
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் ஜெசிகா மனெய்ரோ உடன் மோதினார்.
இதில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து, தொடரில் முதல் சுற்றோடு வெளியேறினார்.