டென்னிஸ்

பிரிஸ்பேன் ஓபன்: நம்பர் 2 வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்த உக்ரைன் வீராங்கனை

Published On 2026-01-09 03:31 IST   |   Update On 2026-01-09 03:31:00 IST
  • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 2 வீராங்கனை தோல்வி அடைந்தார்.

சிட்னி:

பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் நம்பர் 2 வீராங்கனையான அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய உக்ரைன் வீராங்கனை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெண்டா அனிசிமோவா தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News