டென்னிஸ்

தொடர் தோல்வி எதிரொலி: தரவரிசையில் பின்னடைவை சந்தித்த ஸ்வியாடெக்

Published On 2025-05-20 23:57 IST   |   Update On 2025-05-20 23:57:00 IST
  • டென்னிஸ் தரவரிசையில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
  • ஸ்வியாடெக் தொடர் தோல்வி அடைந்து வருவதால் தரவரிசையில் பின்தங்கி உள்ளார்.

புதுடெல்லி:

சமீபத்தில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்நிலையில், டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யு.டி.ஏ. வெளியிட்டது.

இதில் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் அரினா சபலென்கா நம்பர்-1 இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இத்தாலி ஓபன் பைனல் வரை சென்ற அமெரிக்காவின் கோகோ காப் 2வது இடம் பிடித்துள்ளார்.

மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 3வது இடத்தையும், இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஜாஸ்மின் பவுலினி 4வது இடத்தையும் கைப்பற்றினார்.

போலந்தின் இகா ஸ்வியாடெக் 2-வது இடத்தில் இருந்து நம்பர்-5 இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர் சமீபத்தில் முடிந்த இத்தாலி ஓபனில் 3வது சுற்றோடு திரும்பினார்.

கடந்த ஆண்டில் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதற்கு பிறகு ஸ்வியாடெக் தொடர் தோல்வி அடைந்து வருவதால் தரவரிசையில் பின்தங்கி உள்ளார்.

Tags:    

Similar News