டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா, சக்காரி 2வது சுற்றில் வெற்றி

Published On 2025-08-28 22:35 IST   |   Update On 2025-08-28 22:35:00 IST
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
  • பெலாரசின் சபலென்கா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

நியூயார்க்:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் பெலாரசின் சபலென்கா, ரஷியாவின் பொலினா குடர்மெடோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் அன்னா போந்தாரை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News