டென்னிஸ்

நிங்போ ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா

Published On 2025-10-20 00:55 IST   |   Update On 2025-10-20 00:55:00 IST
  • நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
  • நேற்று நடந்த இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை வெற்றி பெற்றார்.

பீஜிங்:

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

இதில் அலெக்சாண்ட்ரோவா முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். 2-வது செட்டை ரிபாகினா 6-0 என கைப்பற்றினார்.

இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரிபாகினா 6-2 என கைப்பற்றினார்.

இதையடுத்து 3-6, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தி ரிபாகினா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

Tags:    

Similar News