டென்னிஸ்

Washington Open tennis: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இத்தாலி வீரர்

Published On 2025-07-23 20:56 IST   |   Update On 2025-07-23 20:56:00 IST
  • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
  • இத்தாலி வீரர் முசெட்டி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

வாஷிங்டன்:

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

இதில் முசெட்டி முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட கேமரூன் நூரி அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலியின் முசெட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News