டென்னிஸ்

உலக டென்னிஸ் தரவரிசையில் மொனாக்கோ வீரர் வச்ரோட் 164 இடங்கள் முன்னேற்றம்

Published On 2025-10-14 11:12 IST   |   Update On 2025-10-14 11:12:00 IST
  • ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதல் இடத்தில் கார்லஸ் அல்காரஸ் உள்ளார்.
  • பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் சபலென்கா முதலிடத்தில் உள்ளார்.

நியூயார்க்:

டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் டாப்-5 இடங்களில் முறையே கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் மாற்றமின்றி தொடருகின்றனர்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிசில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் மொனாக்கோ வீரர் வாலென்டின் வச்ரோட் 164 இடம் எகிறி 40-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இதேபோல் அவரிடம் தோற்று 2-வது இடம் பிடித்த பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரின்டர்னெக் 26 இடங்கள் ஏற்றம் கண்டு 28-வது இடத்தை பெற்றுள்ளார்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் சபலென்கா (பெலாரஸ்), இகா ஸ்வியாடெக் (போலந்து), கோகோ காப் (அமெரிக்கா), அனிசிமோவா (அமெரிக்கா) ஆகியோர் முதல் 4 இடங்களில் நீடிக்கின்றனர். ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 5-வது இடத்தை வசப்படுத்தி இருக்கிறார்.

Tags:    

Similar News