என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக டென்னிஸ் தரவரிசை"

    • ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதல் இடத்தில் கார்லஸ் அல்காரஸ் உள்ளார்.
    • பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் சபலென்கா முதலிடத்தில் உள்ளார்.

    நியூயார்க்:

    டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் டாப்-5 இடங்களில் முறையே கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் மாற்றமின்றி தொடருகின்றனர்.

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிசில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் மொனாக்கோ வீரர் வாலென்டின் வச்ரோட் 164 இடம் எகிறி 40-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இதேபோல் அவரிடம் தோற்று 2-வது இடம் பிடித்த பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரின்டர்னெக் 26 இடங்கள் ஏற்றம் கண்டு 28-வது இடத்தை பெற்றுள்ளார்.

    பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் சபலென்கா (பெலாரஸ்), இகா ஸ்வியாடெக் (போலந்து), கோகோ காப் (அமெரிக்கா), அனிசிமோவா (அமெரிக்கா) ஆகியோர் முதல் 4 இடங்களில் நீடிக்கின்றனர். ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 5-வது இடத்தை வசப்படுத்தி இருக்கிறார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றிய மேடிசன் கீஸ் 7 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) 8,135 புள்ளியுடன் அதே 2-வது வரிசையில் உள்ளார்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் சமீபத்தில் முடிவடைந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னரும் (இத்தாலி), பெண்கள் ஒற்றையர் பிரிவில் மேடிசன் கீசும் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    இந்த நிலையில் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்க வைத்த சின்னர் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். அவர் 11,830 புள்ளிகள் பெற்று உள்ளார். அவரிடம் இறுதிப் போட்டியில் தோற்ற அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) 8,135 புள்ளியுடன் அதே 2-வது வரிசையில் உள்ளார்.

    கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 7010 புள்ளியுடன் 3-வது இடத்திலும், டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) 4-வது இடத்திலும், கேஸ்பர் ரூட் (நார்வே) 5-வது இடத்திலும், அதிக கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்ற சாதனையாளராக ஜோகோவிச் (செர்பியா) 6-வது இடத்திலும், மெட்வதேவ் (ரஷியா) 7-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா (பெலாரஸ்) 8,956 புள்ளியுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். அவர் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் தோற்றாலும் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றிய மேடிசன் கீஸ் 7 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். இகா ஸ்வியாடெக் (போலந்து) 8,770 புள்ளியுடன் 2-வது இடத்திலும் , கோகோ கவூப் (அமெரிக்கா) 6,538 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    பாலினி (இத்தாலி), ரைபகினா (கஜகஸ்தான்), பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் முறையே 4 முதல் 6-வது இடத்தில் உள்ளனர்.

    ×