டென்னிஸ்
மியாமி டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச்- ஜெசிகா பெகுலா
- ஜோகோவிச் 6-1, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- ஜெசிகா பெகுலா 3-7, 6-2, 7-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் அர்ஜென்டினாவின் கமிலோ உகோ காரபெல்லி ஆகியோர் மோதினர். இதில் ஜோகோவிச் 6-1, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா மற்றும் ரஷ்யாவின் அன்னா நிகோலாயெவ்னா கலின்ஸ்காயாவும் மோதினர். இதில் 3-7, 6-2, 7-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.