டென்னிஸ்
அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் மெத்வதேவ்
- கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
- இறுதிப்போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
அல்மாட்டி:
கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
இதில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் கரன்டின் மவுடெட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
சுமார் 882 நாட்களுக்குப் பிறகு மெத்வதேவ் வெல்லும் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.