டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: மரியா சக்காரி, கிரெஜ்சிகோவா முதல் சுற்றில் வெற்றி

Published On 2025-09-24 18:26 IST   |   Update On 2025-09-24 18:26:00 IST
  • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
  • இதில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

பீஜிங்:

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகெர் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய மரியா சக்காரி முதல் செட்டை 7-6 (7-5) என வென்றார். இதற்கு பதிலடியாக அமெரிக்க வீராங்கனை 7-6 (7-5) என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மரியா சக்காரி 7-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் செக் வீராங்கை பார்பரா கிரெஜ்சிகோவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அன்னா பிளின்கோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News