டென்னிஸ்

Washington Open tennis: ஆண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி ஜோடி

Published On 2025-07-28 05:07 IST   |   Update On 2025-07-28 05:07:00 IST
  • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
  • ஆண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

வாஷிங்டன்:

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இத்தாலியின் சைமோன் பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, மொனாக்கோவின் ஹியூகோ நைஸ்-பிரான்சின் ரோஜர் வாஸ்லின் ஜோடி உடன் மோதியது.

இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

Tags:    

Similar News