டென்னிஸ்

ஓய்வை அறிவித்தார் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா

Published On 2025-11-01 15:28 IST   |   Update On 2025-11-01 15:28:00 IST
  • கடந்த 20 ஆண்டுக்கு மேலாக டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருபவர்.
  • இரட்டையர் பிரிவில் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

புதுடெல்லி:

டென்னிஸ் உலகின் இரட்டையர் பிரிவில் தலைசிறந்து விளங்கி வருபவர் ரோகன் போபண்ணா. இரட்டையர் பிரிவில் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

கடந்த 20 ஆண்டுக்கு மேலாக டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருபவர்.

43வது வயதில் ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் பட்டம் பெற்று சாதனை புரிந்தவர். 2017ம் ஆண்டில் பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையரில் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியவர்.

இந்நிலையில், ரோகன் போபண்ணா தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போபண்ணா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், குட்பை, ஆனால் இது முடிவல்ல என பதிவிட்டுள்ளார்.

தற்போது நடந்து வரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் தொடரின் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் வெளியேறினார்.

Tags:    

Similar News