டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா

Published On 2025-11-05 22:15 IST   |   Update On 2025-11-05 22:15:00 IST
  • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
  • 3வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா வெற்றி பெற்றார்.

ரியாத்:

ஒவ்வொரு ஆண்டும் 8 முன்னணி வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது.

செரீனா பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா மற்றும் மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில், 3வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதுவதாக இருந்தது. காயம் காரணமாக மேடிசன் கீஸ் போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரஷியாவின் எகட்ரினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய எலினா ரிபாகினா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

Tags:    

Similar News