டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை: பிரிட்டன் வீரர் அறிவிப்பு

Published On 2025-02-24 01:45 IST   |   Update On 2025-02-24 01:45:00 IST
  • துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
  • இந்த தொடரில் இருந்து பிரிட்டன் வீரர் டிராபர் விலகியுள்ளார்.

துபாய்:

துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு சுற்றுகள் நேற்று தொடங்கியது.

இந்நிலையில், பிரிட்டனின் முன்னணி வீரரான ஜாக் டிராபர் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

எனது உடலை நிர்வகிப்பதற்கும், ஆண்டு முழுவதும் தொடர்ந்து போட்டியிடுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குவதற்கும் நான் குழு ஆலோசனையைப் பெறுகிறேன். துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் நான் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஜாக் டிராபர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News