டென்னிஸ்
இந்தியன் வெல்ஸ் ஓபன்: முதல் சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், முன்னணி வீரரும், செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், நெதர்லாந்தின் போடிக் வான் டே உடன் மோதினர்.
இதில் முதல் செட்டை 2-6 என இழந்த ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் ஜோகோவிச் 1-6 என இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.