டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: காயத்தால் வெளியேறிய டிமிட்ரோ- தோல்வியில் இருந்து தப்பிய சின்னர்
- முதல் செட்டை 3-6 என்ற கணக்கிலும் 2-வது செட்டையும் 5-7 என்ற கணக்கிலும் தோற்றார்.
- 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோ காயத்தால் வெளியேறினார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்றில் பல்கேரியாவை சேர்ந்த 19-வது வரிசையில் உள்ள டிமிட் ரோவை எதிர் கொண்டார்.
இதன் முதல் செட்டை சின்னர் 3-6 என்ற கணக்கில் இழந்தார். 2-வது செட்டையும் அவர் 5-7 என்ற கணக்கில் தோற்றார். 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோ காயத்தால் வெளியேறினார். இதனால் சின்னர் தோல்வியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார். டிமிட்ரோவ் விலகியதால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சின்னர் கால்இறுதியில் 10-ம் நிலை வீரரான ஷெல்டனை சந்திக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த அவர் 4-வது சுற்றில் 3-6, 6-1, 7-6 (7-1), 7-5 என்ற கணக்கில் லாரன்சோ சோன்கோவை (இத்தாலி) தோற்கடித்தார்.