டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையரில் பிரிட்டன் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Published On 2025-08-06 20:14 IST   |   Update On 2025-08-06 20:14:00 IST
  • கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.;
  • ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் பிரிட்டன் ஜோடி வெற்றி பெற்றது.

டொராண்டோ:

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பிரிட்டனின் ஜூலியன் கேஷ்-லாய்ட் கிளாஸ்பூல் ஜோடி, ஜெர்மனியின் டிம் புட்ஸ்-கெவின் ரெவெயிட்ஸ் ஜோடி உடன் மோதியது.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பிரிட்டன் ஜோடி 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் ஜெர்மனி ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Tags:    

Similar News