டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: சாதிப்பாரா வீனஸ் வில்லியம்ஸ்?

Published On 2026-01-18 05:30 IST   |   Update On 2026-01-18 05:30:00 IST
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
  • இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

மெல்போர்ன்:

நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

ஆண்கள், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர், கலப்பு இரட்டையர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், இந்தத் தொடரில் அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (45), 5 ஆண்டுக்குப் பிறகு களமிறங்க உள்ளார்.

வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் செர்பியாவின் ஓல்கா டேனிலோவிச்சை சந்திக்கிறார்.

7 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இவர் வைல்ட் கார்டு மூலம் விளையாடுகிறார் என்பதால் இவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் போட்டியிடும் மிக வயதான பெண் வீரர் என வரலாறு படைப்பார்.

Tags:    

Similar News