டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2025-08-15 01:13 IST   |   Update On 2025-08-15 01:13:00 IST
  • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
  • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.

சின்சினாட்டி:

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லூகா நார்டி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார். இதில் முதல் செட்டை ஸ்வரேவ் 7-5 என கைப்பற்றினார். 2வது செட்டில் 3-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, கச்சனாவ் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து ஸ்வரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News