விளையாட்டு
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: திரிஷா- காயத்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்: கிடாம்பி ஸ்ரீகாந்த் ஏமாற்றம்
- திரிஷா- காயத்ரி ஜோடி 21-12, 21-8 என எளிதாக வெற்றி பெற்றது.
- கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் சீன வீரரிடம் 15-21, 11-21 எனத் தோல்வியடைந்தார்.
சுவிட்சர்லாந்து ஓபன் 2025 பேட்மிண்டன் தொடர் பாசெலில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான இரட்டையர் பிரவு போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடியான திரிஷா ஜோலி- காயத்ரி கோபி சந்த், ஜெர்மனியின் அமெரிலி லீமேன்- செலின் ஹப்ஸ்ச் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் இந்திய ஜோடியான திரிஷா- காயத்ரி 21-12, 21-8 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பியான்ஷு ராஜாவத் 15-21, 17-21 என டோமா போபோவிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் ஹெச்.எஸ். பிரனோயை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியிருந்தார். ஆனால் 2-வது சுற்றில் சீனாவின் லி ஷி பெங்கிடம் 15-21, 11-21 தோல்வியடைந்தார். கிடாம்பி ஸ்ரீகாந்தால் 40 நிமிடம் கூட தாக்குப்பிடிப்ப முடியவில்லை.