விளையாட்டு
null

ரிஷப் பண்ட் அவுட் ஆன விதம் ஏமாற்றம் அளிக்கிறது- கவாஸ்கர் பாய்ச்சல்

Published On 2024-12-28 10:09 IST   |   Update On 2024-12-28 10:15:00 IST
  • இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது நிலைமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும்.
  • உங்கள் அணியை மோசமாக வீழ்த்துகிறது என்றார்.

மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது ரிஷப் பண்ட் 28 ரன்னில் அவுட் ஆனார். அந்த சமயத்தில் அவர் தேவையற்ற ஷாட் அடித்து அவுட் ஆனதாக விமர்சனம் எழுந்துள்ளது.

போலண்ட் வீசிய 56வது ஓவரில் 3-வது பந்தை ரிஷப் பண்ட் லாப் ஷாட் அடிக்க முயன்று தடுமாறி கீழே விழுந்தார். அடுத்த பந்திலும் அவர் அதே போலத் தான் ஆடுவார் என போலண்ட் பந்து வீசினார். அது போலவே ரிஷப் பண்ட் கீழே குனிந்து ஸ்கூப் ஷாட் ஆட முயன்றார். ஆனால், பேட்டில் டாப் எட்ஜ் ஆன பந்து தேர்டு மேன் திசையில் நின்று இருந்த நாதன் லயனிடம் கேட்ச் ஆனது.


இந்த நிலையில் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறும்போது, ரிஷப் பண்ட் அவுட் ஆன விதம் ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பிட்ட 2 பீல்டர்கள் உள்ளனர். ஆனால் அந்த இடத்தில் ரிஷப் பண்ட் பந்தை அடித்தார். இது முட்டாள்தனமானது. அந்த சமயத்தில் இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது நிலைமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும்.

இது உங்கள் இயல்பான விளையாட்டு அல்ல. அது ஒரு முட்டாள் ஷாட். இது உங்கள் அணியை மோசமாக வீழ்த்துகிறது என்றார்.

Tags:    

Similar News