விளையாட்டு
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் சுமித் அன்டில்
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 4 தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
புதுடெல்லி:
மாற்றுத் திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப்.44 பிரிவு) இந்திய வீரர் சந்தீப் சர்கார் 62.82 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
இதில் இன்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப்.64 பிரிவு) இந்திய வீரர் சுமித் அன்டில் 71.37 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
நடப்பு தொடரில் இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என 9 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.