விளையாட்டு

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி

Published On 2025-06-03 14:49 IST   |   Update On 2025-06-03 14:49:00 IST
  • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
  • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

ஜகார்த்தா:

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹரா உடன் மோதினார்.

இதில் பிவி சிந்து முதல் செட்டை 22-20 என வென்றார். 2வது செட்டை நஜோமி 23-21 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை பி.வி.சிந்து 21-15 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News