விளையாட்டு

நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதல் தரவரிசை - உலகின் நம்பர் 1 வீரரானார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா

Published On 2023-05-22 22:11 IST   |   Update On 2023-05-22 22:14:00 IST
  • ஈட்டி எறிதல் தரவரிசையில் உலகின் முதல் நிலை வீரரானார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
  • ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா.

புதுடெல்லி:

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா.

கடந்த 5-ம் தேதி தோஹா டயமண்ட் லீக்கில் தங்கம் வென்றதன் மூலம் தனது 2023 சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். இந்தப் போட்டியில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார்.

இந்நிலையில், ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நீரஜ் சோப்ரா 1,455 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் என்ற வீரர் ௧,433 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

இதையடுத்து, உலக தடகள வரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் நீரஜ் சோப்ரா.

Tags:    

Similar News