விளையாட்டு

காதலியின் மகளுக்கு முன்னுரிமை... சொந்த மகளை பற்றி கவலையில்லை- முகமது ஷமி மீது முன்னாள் மனைவி குற்றச்சாட்டு

Published On 2025-08-16 12:31 IST   |   Update On 2025-08-16 12:31:00 IST
  • ஆர்யாவுக்கு ஒரு முன்னணிப் பள்ளியில் சேர்க்கை கிடைத்தது.
  • பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த 2014-ம் ஆண்டு அவர் ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார். 2015-ல் அவர்களுக்கு ஆர்யா என்ற மகள் பிறந்தார். பின்னர் குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு ஹசின் ஜகான் பலமுறை ஷமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

ஹசின் ஜகானுக்கும் அவரது மகளுக்கும் முகமது ஷமி மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் ரூ.2.5 லட்சம் மகளின் கல்விச் செலவுகளுக்கானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில் ஷமிக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜகான் மீண்டும் பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஆர்யாவின் நலன்களைப் புறக்கணித்து, காதலியின் மகளுக்கும் குடும்பத்திற்கும் முகமது ஷமி முன்னுரிமை அளித்தார். ஆர்யாவுக்கு ஒரு முன்னணிப் பள்ளியில் சேர்க்கை கிடைத்தது. இதைத் தடுக்க சில எதிரிகள் முயற்சித்தனர். காதலி மற்றும் அவரது மகளுக்காக ஏராளமாகச் செலவு செய்யும் ஷமி, தனது சொந்த மகளைப் பற்றி கவலைப்படவில்லை.

எனது மகளின் தந்தை ஒரு கோடீஸ்வரராக இருந்த போதிலும் எனது வாழ்க்கையில் விளையாடுகிறார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது. பெண்களை ஏமாற்றுபவர்.

இவ்வாறு ஹசின் ஜகான் கூறியுள்ளார்.

Tags:    

Similar News