விளையாட்டு
null
பாரா ஒலிம்பிக்- சுஹாஸ் யதிராஜ் வெள்ளி
- இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது.
- இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பிரான்ஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
ஆண்கள் ஒற்றையர் SL4 இறுதிப் போட்டியில் சுஹாஸ் யாதிராஜ் 9-21, 13-21 என்ற செட் கணக்கில் நடப்புச் சாம்பியனான லூகா மசூரிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
இவர் உத்தரபிரதேச கேடரின் 2007 பேட்ச்சின் ஐஏஎஸ் அதிகாரி ஆவார், மேலும் கவுதம் புத்த நகர் மற்றும் பிரயாக்ராஜ் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக பணியாற்றியுள்ளார். அவர் 2018 இல் தேசிய பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தியா இதுவரை 2 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றுள்ளது.